10 Year old Charan Need Urgent Bone Marrow Transplant Help to save him!

14%

$3975 Raised

14%

of $29044 Goal from 157 supporters

Even your small contribution will make a big difference

10 Year old Charan Need Urgent Bone Marrow Transplant Help to save him!

More about the Fundraiser

அம்மா,நான் டாக்டர் ஆகனும் எப்போதுமே நான் எழுந்திரிப்பேன் ??

தனது எதிர்கால கனவுகளை சொல்லிக் கொண்டிருக்கிறான் எனது மகன் சரண் (10)வயது. அவன் கையைப் பிடித்து எதுவும் சொல்ல முடியாமல் உள்ளுக்குள் வெந்து கொண்டிருக்கிறேன். மருத்துவர் ஆக வேண்டுமெனும் கனவு சிறு காய்ச்சலில் தொடங்கி இன்று இரத்தப் புற்று நோயில் வந்து நிற்கிறது.நொருங்கி கிடக்கிறது மனது.கண்ணாடி முன் நின்று பார்க்கிறான் நாளாக நாளாக முடி உதிர்வதை என்னால் பார்க்க முடியவில்லை . எதுவும் செய்ய முடியாத குற்ற உணர்வில் குறுகி சாகிறேன். இந்த சூழலில் விஷ மருந்துகளை கொடுக்கலாம் என்றால் என்பிள்ளையை இழக்க நேரிடும். தயவு செய்து என் பிள்ளையின் நலன் கருதி அவனின் கனவு நிறைவேற உதவுமாறு கைகூப்பி வேண்டுகிறேன்.

எனது பெயர் விசாலாட்சி கணவர் பெயர் தனஞ்செயா. ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் வசித்து வருகிறோம். எனது மகன் சரண் (வயது 10). ஒரு வருடத்திற்கு முன்பு சரண் காய்ச்சலால் அவதிப்பட்டான்  தொடர்ந்து காய்ச்சல் அடித்ததால், உள்ளூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை அளித்தோம் அவர், வழக்கமான நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மாத்திரைகள் கொடுத்துள்ளார். ஆனாலும் நோய் குணமடையவில்லை. நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அந்த டாக்டர் பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.  போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சரண் உடல்நிலையை டாக்டர் தீவிரமாக பரிசோதனை செய்தபோது, சரணுக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சரணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சரணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், மே மாதம் 3-வது வாரத்திற்குள் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஹீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், இந்த ஆபரேசன் செய்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இதற்காக சுமார் 20 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்றும் கூறியுள்ளனர்.

வறுமை நிலையில் உள்ள நாங்கள் இவ்வளவு பணம் திரட்டுவது என்பது சாத்தியமற்றது. இவ்வளவு பெரிய தொகை செலவு ஆகும் என கேள்விப்பட்டதும் அதிர்ந்து போனோம்.  நம் பிள்ளை நமக்கு பழையபடி கிடைக்க மாட்டானா என.விவசாயத் தொழில் மூலம் மாதம் 5000 ரூபாய் மட்டுமே வருவாய் பெறும் எங்களால் இந்த தொகையை திரட்டுவது என்பது முடியாத காரியம். அதேசமயம் மகனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்பதற்காக, நன்கொடையாளர்களின் உதவியை நாடி உள்ளோம். 

நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரூபாயும் உதவும், ஏழைச் சிறுவனின் மறுவாழ்வுக்கு உதவியாக இருக்கும்.என் பிள்ளையின் மருத்துவர் ஆக வேண்டுமென கனவு முளையிலேயேகருகி விடுமோயென நொடிக்கு நொடி நெஞ்சு பதறுகிறது. என் பிள்ளையின் கனவு நிறைவேறிடவும்,எங்கள் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கவும் உதவுமாறு உங்களை வேண்டுகிறேன்.



Bank Name: Yes Bank
Account number: 2223330019722441
Account name: Reddi
IFSC code: YESB0CMSNOC

to receive your bank transfer acknowledgment


Fundraiser Documents


 
No updates


A Fundraiser By

Reddi



Top 5 Donations

Balaguru

₹ 20000

M.Murugesan

₹ 10000

Aravind

₹ 10000

Kasee Palaniappan

$ 100

S SHANMUGAM

₹ 5000


Supporters 157