Help Rajesh to Walk again and live like a normal Man

11%

$305 Raised

11%

of $2662 Goal from 14 supporters

Even your small contribution will make a big difference

Help Rajesh to Walk again and live like a normal Man

More about the Fundraiser


Dear helping souls,

                       I am Rajesh (32 years old),  my native is Naduvalur (Ariyalur district). At the age of 12, I lost my mother after one year my father also died. In Chennai I worked as a supervisor in one restaurant.  On 2013, I met with an accident and  I got injury in my Spinal cord ,so under the parts of my neck started to paralysed. There is no improvement in my body despite the surgery. My wife only took care of me, she used to go for work to maintain the family but later she also left me alone because of my disableness.

  I went more than three rehabilitation center but there is no use I cried to my friend about the condition of mine .So he kindly allowed me to stay with him . My friend also suffered to maintain me because he also a handicapped. Now I am staying in a oldage home in Trichy, to stay in that home I have to pay 10,000/- per month and for my other needs I have to pay more. One of the doctor suggested that, the nerves in your neck were not damaged so you had another chance to recover through the  VARMA TREATMENT, but I can’t pay for the treatment . But, I want to live my life again without any problem.  I need 2 lakhs for the treatment, Kindly help me and give a new life for me.  “ All the world is full of suffering, it is also full of overcoming”.

                                    “Help Rajesh to Overcome;

                                         Through the part of your Income”


உதவும் உள்ளங்களே!

           என் பெயர் ரஜேஷ், வயது-32.த/பெ. நடராஜ். சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் கிராமம். என்னுடைய 12 வயதில்(1999ல்) என் தாயும், அடுத்த ஆண்டில்(2000ல்) எனது தந்தையையும் இழந்துவிட்டேன். உடன் பிறந்த ஒரு மூத்த சகோதரி, அவர் திருமணமாகி சென்றுவிட்டார். நான் சென்னையில் ஒரு உணவகத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தேன். 

        2013-ஆம் ஆண்டு நடந்த சிறு விபத்தில் என் முதுகுத் தண்டில் பாதிப்பு ஏற்பட்டு கழுத்துக்குக் கீழே உடல் உறுப்புக்கள் செயலிழந்துவிட்டன. அறுவை சிகிச்சை செய்தும் உடலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. சேமிப்பில் இருந்த பணம் முழுவதும் அறுவை சிகிச்சைக்கு செலவிடப்பட்டுவிட்டன. என் மனைவி வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தில் வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவுகளை சமாளித்து வந்தோம். என் கை விரல்களால் சிறு டம்ளரை கூட பிடித்து தூக்க முடியாத நிலையில் என் மனைவிதான் என்னை 2018ம் ஆண்டு வரை பராமரித்து வந்தார். அவர் வேலைக்கு சென்றுவிட்டால்
நாள் முழுவதும் நான் உணவு, தண்ணீர் கூட இன்றி தனியாக இருப்பேன். இதனால் உடனிருந்து என்னை கவனித்துக் கொள்ள என் மனைவி 2015ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டார். அதனால் வருமானமின்றி வீட்டு வாடகை, உணவு செலவுகளுக்கே மிகுதியாக கஷ்டப்பட்டோம். சிலரின் சிறிய உதவிகளால் குடும்ப செலவுகளை மிகுந்த சிரமங்களுக்கு இடையே சமாளித்தோம். மேலும் நான் இருக்கும் சூழலில் என் மனைவி குடும்பத்தினர் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். 2018 ஆம் ஆண்டில் என் மனைவி என்னை பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். எங்கு செல்வது, எப்படி வாழ்வது என்ற இக்கட்டான சூழலில் இருந்த நான் தென்காசிக்கு அருகில் ஆயக்குடி எனும் இடத்தில் உள்ள “அமர் சேவா சங்கம்” என்ற மாற்றுத்திறனாளிகள்  மறுவாழ்வு மையத்திற்கு சென்று அங்கு 9 மாதங்கள் தங்கி இருந்தேன். தொடர்ந்து அங்கே தங்கி இருக்க முடியாது என்பதால் , கடந்த ஆகஸ்ட் மாதம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன்.

       இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி நண்பரிடம் எனது நிலையை சொல்லி அழுதேன். அவர் தன்னுடைய வீட்டில் சிறிதுகாலம் தங்கிக்கொள்ள அனுமதித்தார். அவர் வீட்டில்1 1/2 மாதம் தங்கி இருந்தேன். அவரும் ஒரு கால் ஊனமான மாற்றுத்திறனாளி என்பதால் என்னை கவனித்து கொள்ள மிகவும் சிரமப்பட்டார். பின்பு அங்கிருந்து வந்து தற்போது திருச்சியில் ஒரு முதியோர் இல்லத்தில் கடந்த ஒரு மாதகாலமாக தங்கி உள்ளேன். உறவென்று யாரும் இன்றியும், தங்குவதற்கு இடமுமின்றியும், உணவு மருத்துவ செலவுகளுக்கு மிகுதியாக கஷ்டப்படுகின்றேன். திருச்சி முதியோர் இல்லத்தில் சேர்வதற்கு கூட சென்னையில் இருந்து ஒரு சார் ரூ12000/- அளித்து உதவி செய்தார். அந்த முதியோர் இல்லத்தில் தங்கி இருக்க மாதம் ரூ10000/- கட்டணமாக செலுத்த வேண்டும், என்னை குளிக்கவைக்க, டையப்பர் வாங்குவதற்கான கட்டணங்கள் தனியாக அளிக்க வேண்டும். 

            என் கழுத்துப் பகுதியில் உள்ள நரம்பு பாதிப்படையாமல்  உள்ளதால் என் உடல் குறைபாட்டை வர்மா சிகிச்சை அளித்து அதன் பின்பு தொடர்ச்சியாக குறைந்தது 3 ஆண்டுகள் பிசியோதெரபி சிகிச்சை அளித்து சரி செய்யலாம் என்று கூறுகின்றனர். இதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் கூம்பவிளை எனும் இடத்தில் உள்ள ”வர்மானியம் பவுண்டேசன்” என்ற மருத்துவமனைக்கு சென்று மருத்துவரைச் சந்தித்தேன். உறவுகள் யாருமின்றி, எவ்வித பொருளாதார பின்புலமும் இன்றி மிகுந்த வருமையான சூழலில் சிக்கி தவிக்கும் என்னால் தொடர்ந்து அந்த வர்மா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை. நான் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ஆனால் பணமின்மை என்பது என்னை முழுமையாக முடக்கி போட்டுள்ளது. எனவே நான் தங்கி இருப்பதற்கும், வர்மா சிகிச்சைக்கும், அதைத் தொடர்ந்து குறைந்தது 3 ஆண்டுகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை பெறுவதற்கும் உதவி செய்யும் நல் மனம் கண்டோர் எனக்கு பண உதவி செய்திடுமாறு உங்களை மிகவும்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

இப்படிக்கு
தங்கள் உதவிக்கரங்களை எதிர் நோக்கும்
ந.ராஜேஷ்.

Bank Name: RBL Bank
Account number: 2223330012364857
Account name: edudharma
IFSC code: RATN0VAAPIS
UPI : rzpy.edudharma00000003938@hdfcbank

to receive your bank transfer & UPI transfer acknowledgment


Fundraiser Documents


 
No updates


A Fundraiser By

edudharma



Top 5 Donations

Rajasekar Ganesan

$ 50

Ramesh

$ 50

V.Seshasayee

₹ 2500

Pushpa

₹ 500

Aarthi

₹ 500


Supporters 14