Support Sanath Kumar To Become A Doctor

0%

$48 Raised

0%

of $16323 Goal from 2 supporters

Even your small contribution will make a big difference

Support Sanath Kumar To Become A Doctor

More about the Fundraiser

Story/Description

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ர. சனத்குமார், மிகவும்  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சனத்குமார் கடைசிப் பிள்ளை. இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார். இவரது அண்ணன் பொறியியல் கல்லூரியில்  படித்து வருகிறார். சனத்குமாரின் தந்தை லாரி டிரைவர். அம்மா கூலி வேலை செய்து வருகிறார். இவர்களின் வருவாயினை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. இவர்களின் மனதிற்கு ஆறுதலான ஒரு நிகழ்வு சனத்குமாரின் கல்வியார்வம் மட்டுமே.

             2016ம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பில் 500க்கு 491 மதிப்பெண்ணும், 2018ம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பில் 1200க்கு 1096 மதிப்பெண்ணும், 2019ம் கல்வியாண்டில் நீட் தேர்வில் 337 மதிப்பெண்ணும் எடுத்த சனத்குமாருக்கு, சிறு வயதிலிருந்தே மருத்துவம் படிக்க ஆசை. இருந்தும் 25 மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி வாய்ப்பைத் தவறவிட்டார்.

              2019ம் வருடம் மருத்துவக் கலந்தாய்வில் இவருக்கு கன்னியாகுமரி மாவட்டம்  ஸ்ரீ மூகாம்பிகா  இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் சீட் வழங்கப்பட்டது. வருடத்திற்கு சுமார் 3.13 இலட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் என்பது சனத்குமாரின் குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், முதல் வருட கல்விக் கட்டணத்திற்கு அவர்களது வீட்டை அடமானம் வைத்து அதன் மூலம் வந்த பணத்தை வைத்து முதல் வருடம் படிப்பை வெற்றிகரமாக முடித்தார் சனத்குமார். மேலும் இரண்டாம் வருடக் கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ளது.இதர கடன்களும் 5 இலட்சத்திற்கும் மேல் உள்ளதால், மேலும் நான்கு வருடம் படிப்பைத் தொடர கிட்டத்தட்ட 12 இலட்ச ரூபாய் தேவைப்படுகிறது.  இந்த வருட வகுப்பில் சேர ரூபாய் 3.13 இலட்சம் தேவைப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரி இயங்கவில்லை. கல்லூரி திறக்கும் பட்சத்தில்  கல்வி கட்டணம் கட்ட முடியாத நிலையில் உள்ளனர்  சனத் குமாரின் பெற்றோர்.

                   பல இன்னல்களுக்கும், சிக்கல்களுக்குப் பின்னரும் மருத்துவர் ஆகும் கனவோடு படித்து வரும் ஏழை மாணவரான சனத்குமாருக்கு உதவவும். அவரின் நான்கு வருட படிப்புக்கு ஸ்பான்சர் செய்யவும். விருப்பமுள்ளவர்கள், https://www.edudharma.com/fundraiser/support-sanath-kumar-to-become-a-doctor-1 இந்த லிங்கிற்குச் சென்று தங்களால் இயன்ற உதவியைச் செய்யலாம். இச்செய்தியை உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் & சமூக வலைத் தளங்களிலும் பகிருமாறு, சனத்குமாருக்காக நிதி திரட்டும்  www.edudharma.com கேட்டுக்கொள்கிறது.

                    உதவி செய்வோம், ஏழை மாணவனின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்.



Bank Name: RBL Bank
Account number: 2223330000358648
Account name: edudharma
IFSC code: RATN0VAAPIS
UPI : rpy.edudharma00000005241@icici

to receive your bank transfer & UPI transfer acknowledgment


Fundraiser Documents


 

A Fundraiser By

edudharma



Top 5 Donations

Jawahar

₹ 3000

Dhanapal Periasamy

₹ 500


Supporters 2