Support Udhayakeerthika to become a Astronaut

2%

$188 Raised

2%

of $11456 Goal from 9 supporters

Even your small contribution will make a big difference

Support Udhayakeerthika to become a Astronaut

More about the Fundraiser

கல்பனா சாவ்லா' தெரியுமா? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீரர்! அவருக்குப் பின் 'சுனிதா வில்லியம்ஸ்', இந்திய வம்சாவளியில் மீண்டுமொரு விண்வெளி வீராங்கனை... இவ்விரு பெண்மணிகளின் விண்வெளிப் பயணம், இந்திய சரித்திரத்தின் பெருமிதப் பக்கங்கள். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான 'ராகேஷ் ஷர்மா' தவிர்த்து, நேரடியாக ஒரு இந்தியர் விண்ணுக்குச் சென்றதில்லை என்பது இன்னும் நம் ஏக்கமாகவே இருக்கிறது. கூடிய விரைவில் இந்த ஏக்கம் மகிழ்ச்சியாக மாறலாம், காரணம் இந்தியா 2021-இல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது... இதில் தமிழகப் பெண் ஒருவர் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என நாம் கூறினால்? ஆம், உதயகீர்த்திகாதான் அந்தப் பெண்...

தூங்கவிடாமல் துரத்தும் விண்வெளிக் கனவு...

தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த, தாமோதரன்-அமுதாவின் மகள் உதயகீர்த்திகா. நாம் பூமி பார்த்து நடைபயின்ற காலத்தில், வானம் பார்த்து 'நிலவுக்கு எப்படிச் செல்வது?' எனக் கேட்டவர் உதயா. பள்ளியில் படிக்கும்போதே விண்வெளி பற்றிய புத்தகங்களையும் தகவல்களையும் ஓடி ஓடி, தேடித் தேடிப் படித்து வானம் தாண்டிப் பார்ப்பது என முடிவெடுத்துவிட்டார் உதயா. பள்ளியில் படிக்கும்போதே, ஒருமுறையல்ல, இரண்டு முறை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ- ISRO) நடத்திய விண்வெளி பற்றிய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் இந்த உதயா!

இந்தியா டு உக்ரெயின்...

படிப்பில் படுசுட்டியான உதயாவுக்கு விண்வெளி வீராங்கனை அல்லது ஆஸ்ட்ரோநாட் (Astronaut) ஆவதே கனவு, லட்சியம், பேச்சு, மூச்சு, எல்லாம்... விண்வெளி ரீதியான பல போட்டிகள் மற்றும் இஸ்ரோ-வின் கட்டுரைப் போட்டிகளில் இவர் பெற்ற வெற்றிச் சான்றிதழ்கள் மூலம் தேனிப் பெண்ணுக்கு, ஐரோப்பாவின் உக்ரெயின் (Ukraine) நாட்டின் கார்க்கிவ் பல்கலைக்கழகத்தில் கிடைத்தது ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் சீட்.

உக்ரெயின் நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்குக் கீழ் செயல்படும், உலகப் புகழ்பெற்ற கார்க்கிவ் விமானப் படை பல்கலைக்கழகத்தில் படிக்க ஓர் ஆண்டுக்கு ஆகும் செலவு மட்டும் ரூ. 60 லட்சம்! உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனெஸ்கோ அமைப்பு 57 லட்ச ரூபாய்க்கான கல்வி உதவித்தொகை வழங்கி உதயகீர்த்திகாவுக்கு உதவியது. மீதி 3 லட்சம் தொகையில், ரூ. 1.80 லட்ச ரூபாயை ஆனந்த விகடனின் அறக்கட்டளை மூலமாக நடிகர் ராகவா லாரன்ஸ் உதயகீர்த்திகாவுக்கு 2015ஆம் ஆண்டு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்குப் பெருமை...

இந்த மாதம் தனது 4 வருட படிப்பைப் பூர்த்தி செய்கிறார் உதயா. தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றிக் கடன் செலுத்தும் விதமாக, இதுவரை 92% சதவீத மதிப்பெண் எடுத்து கிளாஸ் டாப்பராக வந்து சாதித்துக் காட்டியுள்ளார், பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்த உதயா.

தற்போது சர்வதேச அளவில் 25 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய, ஜூலை & ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள போலந்து நாட்டின் Analog Astronaut Training Center நடத்தும் சிறப்பு விண்வெளிப் பயிற்சி வகுப்புகளுக்குத் தேர்வாகியுள்ள ஒரே இந்தியர் உதயகீர்த்திகாதான்! 

போலந்து, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகளில் மூன்று கட்டமாக நடத்தப்படும் இந்த 60 நாள் வகுப்பில், சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளியைப் போன்ற மிகக் கடுமையான சூழ்நிலைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு, வீர்களின் உடல் வலிமை, மன வலிமை மற்றும் விண்கலத்தில் ஏற்படும் பழுதுகளை சரிபார்க்கும் திறன் ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், விண்வெளிப் பயணத்தின்போது ஏற்படும் அதீத அழுத்தம் மற்றும் வேகத்தை உடல் தாங்கிக்கொள்ள 'Centrifuge Training' வழங்கப்படுகிறது. போலந்து நாட்டின் முன்னாள் விண்வெளி வீரர் மிரோஸோவ ஹெர்மாஷெவ்ஸ்கி (Mirosław Hermaszewski) இந்தப் பயிற்சியின் முக்கிய பயிற்றுனர் என்பது குறிப்பிடத்தக்கது.21 வயதில் இந்தியாவின் விண்வெளிக் கனவை நனவாக்கும் ஒரே லட்சியத்தோடு பயணித்துவரும் இளம் சாதனையாளர் உதயாவுக்குத் தற்போது நம் உதவி தேவைப்படுகிறது.

உதவ முன்வருவோம்!

ஒரு பைலட்டுக்குத் தேவையான உடல் திடகாத்திர பரிசோதனையிலும், படிப்பிலும் தேர்வாகியுள்ள உதயகீர்த்திகா, இப்பயிற்சியையும் வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில், இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் பங்குபெறுவது உறுதியாகிவிடும். இருந்தாலும், இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேரவும், மெடிக்கல் செக் அப், விசா, விமான டிக்கெட், உணவு, தங்கும் செலவு என அவருக்குத் தற்போதுதேவைப்படும் தொகை $11000 (அமெரிக்க) டாலர்கள் அல்லது 7,66,000 ரூபாய் ஆகும்.

உதயாவின் குடும்பம் எளிய குடும்பமே என்றாலும், சில வேளை உணவை விட்டுக்கொடுத்தாவது உதயாவின் கனவை நிறைவேற்றுவதைப் பெருமையாக நினைக்கிறது. மகளின் விண்வெளிக் கனவை நனவாக்க ஓடிக்கொண்டே இருப்பவர் அவரின் தந்தை பெயிண்டர் தாமோதரன். இவர் பல தொண்டு நிறுவனங்களை அணுகியும் போலந்து பயிற்சியில் சேருவதற்கான உதவியை யாரும் செய்ய முன்வரவில்லை! இதனையடுத்து, Edudharma.com தளம், உதயகீரத்திகாவுக்காக நிதி திரட்ட ஆரம்பித்துள்ளது. 

ஜூலை மாதம் தொடங்கவுள்ள பயிற்சி வகுப்பில் சேர, இன்னும் 2 வாரங்களில் இந்தத் தொகை தேவைப்படுகிறது. 

இந்தியாவின் விண்வெளிக் கனவு மங்கையான உதயகீர்த்திகாவின் லட்சியத்தை நிறைவேற்ற நம்மால் ஆன உதவியைச் செய்வோம், இந்தியாவின் அடுத்த விண்வெளி வீராங்கனை ஒரு தமிழகப் பெண் எனப் பெருமிதம் கொள்வோம்... 

Bank Name: Yes Bank
Account number: 2223330087514931
Account name: edudharma
IFSC code: YESB0CMSNOC

to receive your bank transfer acknowledgment


Fundraiser Documents


 
No updates


A Fundraiser By

edudharmaTop 5 Donations

Sampathkumar Swaminathan

₹ 2500

Saranya

₹ 500

Kannan

₹ 300


Supporters 9